மெல்போர்ன்:
கட்டுப்பாட்டை மீறி பூனை வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியாவின மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தின் நாக்ஸ் பகுதி மேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ப்பு பூனைகளை வீட்டிற்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும், இந்த விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.