டில்லி
பெரிய நிறுவனங்கள் முழுகாமல் காப்பாற்ற மத்திய அரசு அளிக்க வேண்டிய வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி தொகைகளை அளிக்க முன் வந்துள்ளது.
நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்ததால் தற்போது மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சிறிய, நடுத்தர, பெரிய வர்த்தக நிறுவனங்கள், தொழிலகங்கள் போன்றவை முழுவதுமாக இயங்கவில்லை.
இதனால் பொருளாதார புழக்கம் கடும் பாதிப்பை அடைந்தது. அதையொட்டி ஏப்ரல் 8ஆம் தேதி அன்று நிதி அமைச்சர் நிலுவையில் உள்ள திருப்பி அளிக்க வேண்டிய ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரித் தொகையை உடனடியாக அளிக்க உளதாக அறிவித்தார்.
இதன் மூலம் 14 லட்சம் வரி செலுத்துவோருக்கு ரூ.18000 கோடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன் இறகு கடந்த 15 ஆம் தேடி அன்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் இன்னும் ஒரு வாரத்தில் 10.2 லட்சம் பேருக்கு ரூ.4250 கோடி அளிக்க உள்ளதாக அறிவித்தது.
பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியால் முழுகும் நிலையை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றைக் காக்க அரசு விரைவில் திருப்பி அளிக்க வேண்டிய வருமான வரி மற்றும் ஜி எஸ் டி நிலுவைத் தொகைகளை அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இதில் குறைந்த அளவில் வரி செலுத்தும் நிறுவனங்களுக்கு முதலில் ரூ. 18000 கோடி வழங்கப்பட உள்ளது. இதை ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் அளித்து முடித்த பிறகு பெரிய அளவில் வரி செலுத்துவோருக்கான தொகை திருப்பி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தற்போது சிறிய அளவில் தொகை திரும்ப வரவேண்டிய வரி செலுத்துவோர் எண்ணிக்கை 93% அளவில் உள்ளதாகவும் பெரிய நிறுவனங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அதிக அளவில் நிலுவைத் தொகை உள்ளதாகவும் கூறப்படுகிறது.