டெல்லி: மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மற்றும் சத்திஸ்கர் ஆகிய 8 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 68,020 பேரில் 84.5 சதவீதம் பேர் இந்த 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது: மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,414 ஆக உள்ளது. நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,21,808 ஆக அதிகரித்துள்ளது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. இன்று காலை 7 மணி வரை 6.05 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி, 72வது நாளாக நேற்று, மொத்தம் 2,60,653 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,13,55,993ஐ எட்டியுள்ளது என்று சுகாதாரத்துறை கூறி உள்ளது.