புதுடெல்லி:

ற்போது வரை 32.7 1 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேதியை அரசாங்கம் ஏற்கனவே மார்ச் 31- 2021 வரை நீட்டித்துள்ளது.

இந்நிலையில் MygovIndia தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது வரை இந்தியாவில் 32.71 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று பதிவிட்டுள்ளது.

12 இலக்க எண் கொண்ட பயோமெட்ரிக் ஆதார் முகவரி இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் UIDAI மூலம் வழங்கப்படுகிறது, மேலும் பான் கார்டு என்பது ஒரு நபர் அல்லது நிறுவனத்திற்கு வருமான வரித் துறையால் வழங்கப்படும் பத்து இலக்க எண் கொண்ட கார்டு. இது இரண்டையும் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்திருந்தது.

அடுத்த வருடம் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செயல்படாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இல்லத்தின் முன்பு இந்திய இளைஞர் காங்கிரஸின்(IYC) ஆர்வலர்கள் நேற்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA) 2020ஐ எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். இது ஒரு சிலருக்கு மட்டுமே லாபம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.