டில்லி:
நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக பெய்து வந்த பருவமழைக்கு சுமார் 2ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே கடந்த 1994ம் ஆண்டு இதுபோல் அதிக மழை பெய்தது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், நடப்பு ஆண்டிலும் பருவமழை அளவை விட அதிகமாக செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
நடப்பாண்டில் பருவமழைக்கு பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 2,100 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 46 பேர் காணாமல் போயுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 399 பேரும், மேற்கு வங்காளத்தில் 277 பேரும் இறந்துள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது.
‘மழை வெள்ளப்பாதிப்பு காரணமாக, 738 பேர் காயமடைந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 20,000 விலங்குகள் உயிரிழந்து உள்ளதாகவும், பலத்த மழை மற்றும் வெள்ளம் 1.09 லட்சம் வீடுகள் முழுமையாக சேதமடைந்து உள்ளதாகவும், 2.05 லட்சம் வீடுகளை ஓரளவு சேதப்பட்டுள்ளதாகவும், மற்றும் 14.14 லட்சம் ஹெக்டேர் பயிர்களை அழிந்துள்ளதும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மாநிலங்கள் வாரியாக பாதிப்பு விவரம்:
மகாராஷ்டிரா மாநிலத்தின் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், அங்கு வெள்ளத்தில் சிக்கி 399 பேர் இறந்தனர், 369 பேர் காயமடைந்தனர், 7.5 லட்சம் பேர் 305 நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தில் 22 மாவட்டங்களில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக, 227 பேர் உயிர் இழந்தனர், 37 பேர் காயமடைந்தனர், நான்கு பேர் காணாமல் போயுள்ளனர், 430433 பேர் 280 நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பீகாரில், மாநிலத்தில் 28 மாவட்டங்களைத் தாக்கிய வெள்ளத்தைத் தொடர்ந்து 166 பேர் இறந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 1.96 லட்சம் பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் மழை வெள்ளத்துக்கு 38 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட தாகவும், அங்கு அமைக்கப்பட்ட 98 நிவாரண முகாம்களில் 32,996 பேர் தஞ்சம் புகுந்த மொத்தம் 182 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர் மற்றும் 7 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில், கனமழை மற்றும் வெள்ளத்தால் 181 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 72 பேர் காயமடைந்தனர். 13 மாவட்டங்களில் பதினைந்து பேர் காணாமல் போயுள்ளனர். 2,227 நிவாரண முகாம்களில் மாநிலத்தில் 4.46 லட்சம் பேர் தஞ்சம் புகுந்தனர்.
குஜராத்தில் 22 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, அங்கு 169 பேர் இறந்தனர், 17 பேர் காயமடைந்தனர், 102 நிவாரண முகாம்களில் 17,783 பேர் தஞ்சமடைந்தனர் என்று கூறப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய் கனமழை காரணமாக 13 மாவட்டங்களில் 106 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர், 6 பேர் காணாமல் போயுள்ளனர். 3,233 நிவாரண முகாம்களில் 2.48 லட்சம் பேர் தஞ்சம் புகுந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அசாமில் மழை மற்றும் வெள்ளத்துக்கு 97 பேர் உயிரிழந்தனர், அங்கு 32 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன, இதன் விளைவாக 1,357 நிவாரண முகாம்களில் 5.35 லட்சம் பேர் தஞ்சம் புகுந்தனர்.
இந்த விவரங்களை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.