சென்னை:

ங்கி முறைகேடு புகார் தொடர்பாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் 169 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன்களை பெற்று கொண்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், சிபிஐ அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் திடீர்சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வங்கிகளில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி மற்றும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  டெல்லி, குஜராத், அரியானா, சண்டிகர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில்169 இடங்களில் சிபி பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் 170 குழுக்களாக சென்று அந்தந்த மாநிலங்களில் செயல்படும் சி.பி.ஐ. அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

வங்கிகளில் பணியாற்றும் முறைகேடுகளில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.