சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தினால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்துள்ள செய்தியைப் பகிர்கையில் எனது நெஞ்சில் பெருமை பொங்குகிறது.
மேலும், இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியாவெங்கும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்ததில் அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது. நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதிசெய்வதுதான்.
அப்போதுதான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் நமது பங்கைப் பெற முடியும். இதனைச் சாதிக்க ஒன்றிணைந்து பணியாற்றிடுவோம் எனப் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் அதில், இந்தியாவின் பின் தங்கிய சமுதாயத்தின் விகிதாச்சாரத்தை தெரிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். திமுக நடத்திய சமரசமற்ற சட்டப் போராட்டத்தால் கடந்த மூன்று கல்வியாண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காணவும், சமூகநீதியை நிலைநாட்டவும் நமது உரிமையான பங்கைப் பெறவும் மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடிப் பணியாகும். இதை அடைய நாம் ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்.