டெல்லி: மல்யுத்த வீரர்கள் இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு வீராங்கனையான சாக்சி மாலிக், எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன. ஆனால் பெண்களுக்கான எங்கள் போராட்டம் தவறானதாகிவிடக் கூடாது என்பதற்காக அவற்றை நான் நிராகரித்துவிட்டேன் தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீரர் பஜ்ரங்புனியா மற்றும் வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பஜ்ரங் புனியாவுக்கு விவசாய பிரிவு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டள்ளது. அதபோல வினேஷ் போகத் அரியான மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இதனால் கடந்த ஒராண்டாக நடைபெற்று வந்த மல்யுத்த வீராங்கனைகள் மீதான போராட்டம் சந்தேகங்களை எழுப்பி உள்ளது. ஏற்கனவே இந்த போராட்டம் அரசியல் பின்புலத்தால் நடைபெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்த நிலையில், அதை போராட்டக்கார்கள் மறுத்து வந்தனர். இந்த நிலையில், தற்போது இரு மல்யுத்த வீரர்கள் அரசியலில் நுழைந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மல்யுத்த வீராங்களை சாக்ஷி மாலிக்து, ”பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை நான் நிராகரித்துவிட்டேன். எங்களின் கிளர்ச்சி, பெண்களுக்கான எங்கள் போராட்டம் தவறானதாகிவிடக் கூடாது. எங்கள் போராட்டம் தொடரும் என்பதே என் கருத்து.
விளையாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளதால், மல்யுத்தத்தில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தவுள்ளேன்.
இந்திய மல்யுத்த சம்மேளனம் சுத்தப்படுத்தப்பட்டால்தான் பெண்கள் (வீராங்கனைகள்) மீதான சுரண்டலுக்கு முடிவு கிடைக்கும். எங்கள் போராட்டம் நேர்மையானது. அது தொடரும்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு உடனடி பதவி!
அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வினேஷ் போகத்..