நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

”நம் நாடு மட்டுமல்லாமல், எந்த நாடாக இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான மொழி இருந்தால், அதனால் நாட்டின் முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக் கும் வளர்ச்சிக்கும் நல்லது.

துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் பொதுவாக எந்த மொழியையும் கொண்டு வரமுடியாது.

குறிப்பாக, இந்தியை பொதுவான மொழியாக அறிவித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல, தென் இந்தியா மற்றும் வட இந்திய மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”

நடிகர் ரஜினிகாந்த் இப்படி சொல்லியிருக்கிறார்.. ரஜினி மட்டுமல்ல, நிறைய பேர் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள்.

இந்தியா என்பது, பல்வேறு மொழிகளை பேசும் தேசிய இனங்கள் கொண்ட, யூனியன் ஆப் இந்தியா.. கூட்டாட்சி தத்துவத்தில் உள்ள ஒரு துணைக்கண்டம்..

இந்தியாவுக்கும் யூனியன் ஆப் இந்தியாவுக்கும் வித்தியாசம் தெரிஞ்சா, துரதிஷ்டவசமா…ன்ற வார்த்தையெல்லாம் வராது..

போகட்டும், ”குறிப்பாக, இந்தியை பொதுவான மொழியாக அறிவித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல, தென் இந்தியா மற்றும் வட இந்திய மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்கிறார் ரஜினி..

என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என பொட்டில் அறைந்தார்போல ஏன் அவரால் சொல்லமுடிய வில்லை என்றெல்லாம் நாம் கேட்கவில்லை