கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கும் மேல் இந்தியாவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் திரையரங்குகள் திறக்கப்பட முடியாத சூழலால் அதிக படங்கள் ஓடிடியில் வெளியாகத் தொடங்கின.

தற்போது நெட்பிளிக்ஸ், ஜீ-5, அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார், ஆஹா, பி.எஸ்.வேல்யூ, ஜீ-ப்ளக்ஸ் என மக்களிடையே ஓடிடிகளின் அறிமுகங்கள் பெருகிவிட்டன.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டகுறிஞ்சி என்.சிவக்குமார் “ஓ.டி.டி. தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். இதேபோல், “நஷ்டத்தில் இயங்கும் அரசு கேபிள் டிவி நிறுவனம் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.