திருவனந்தபுரம்: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கேரளா வரும் வெளிமாநிலத்தவருக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நேற்று 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அதுபோல், இன்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

இந் நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வருபவர்கள் covid19jagratha.kerala.nic.in” என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் திருமணங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகளை நடத்த கோவிட் 19 ஜாக்ரதா கேரளா என்ற போர்ட்டலில் முன்கூட்டியே பதிவு செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.