மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும், அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியும் நேருக்கு நேர் சந்தித்தனர்.

77 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகா வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். 2 முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டங்களை வென்ற ஒசாகா, இதுவரை 4  முறை கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.