சென்னை: தமிழகத்தில் 4 மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 10லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மாநகராட்சி பகுதிகளுக்கு நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் ஆகிய 4 மாநகராட்சிகளுக்கு நகர வளர்ச்சி குழுமங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.