டெல்லி:

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி அளித்தது இன்று தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பு குறித்து மூத்த வக்கீல் அஸ்வனிகுமார் கூறுகையில், ‘‘ நாட்டின் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதால் சசிகலாவால் முதல்வர் பதவியை ஏற்க முடியாது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடும் செய்ய முடியாது. இது இறுதி தீர்ப்பு தான்.

இந்த தீர்ப்பு அதிமுக.வின் அரசியல் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கட்சி தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் தான் முதல்வர் யார் என்பது தெரியவரும்’’ என்றார்.

இந்த வழக்கின் சிறப்பு அரசு வக்கீலான ஆச்சார்யா கூறுகையில்,‘‘ 19 ஆண்டு கால வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நம் நாட்டில் நீதித் துறை சுதந்திரமாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

குற்றவாளி பண பலம், அதிகார பலம் இருந்தாலும் தப்ப முடியாது என்பதற்கு இது உதாரணம். 10 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது.’’ என்றார்