சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாகல் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், சென்னை முதல் தென்காசி வரையில் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர்,திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிக கன மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் (சென்னை முதல் தூத்துக்குடி வரை) மழை துவங்கும் என்றும் படிப்படியாக நாளை மாலை முதல் கன மழையாக அதிகரிக்கும் , நாளை முதல் 13 ஆம் தேதி வரை கிழக்கு திசையிலிருந்து வரும் ஈரக்காற்றால் நாளை அதிகாலை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யத்துவங்கும். நாளை மதியம் அல்லது மாலை முதல் இது கன மழையாக அதிகரிக்கும்.
இந்த கனமழை விட்டுவிட்டு வரும் 13ம் தேதி வரை நீடிக்கும். தீபாவளி அன்று மழை மீண்டும் குறையும் பின்னர்.1 5ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வரும் 14ம் தேதி இரவு முதல் மீண்டும் கிழக்கு திசையிலிருந்து வரும் ஈரக்காற்றால், கன மழை துவங்கும் என்றும், இந்த மழை 17ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 18 ஆம் தேதி வரை வட மற்றும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 11ஆம் தேதி இரவு முதல் மழை துவங்கும் எனவும் மிதமானது முதல் கன மழையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடலோர மாவட்டங்களில் மழை சற்று குறைவாக இருக்கும்.
தமிழகத்தில், 14ம் தேதி மிக கன மழைக்கான வாய்ப்பிருப்பதால் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கன மழை பெய்தால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை மேற்கொள்ள, வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறையினருக்கும், வானிலை மையம் தகவல் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்று காலைமுதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், காலை 8 மணி முதல் மழை பெய்து வருகிறது.