கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக பரவலாக கனமழை பெய்துவருகிறது.

இந்த கனமழை காரணமாக பெங்களூரு நகரம் வெள்ளக்காடாக காணப்படுகிறது.

அதேபோல் மங்களூரு நகரம் உட்பட தென் கர்நாடகா முழுவதும் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

பெல்தங்கடி, பந்த்வால், சுல்லியா மற்றும் புத்தூர் தாலுகாக்களின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் முன்னறிவிப்பின்படி.

மே 21 அன்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது, மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், அனைத்து மீன்பிடி படகுகளும் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் ஆறு மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.