சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதுபோல ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தி.மு.க. தலைவர் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை புறநகர் பகுதியான செம்மஞ்சேரி பகுதியில் மழை நீர் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால், மருத்துவர்கள் உடனே சோதனை மேற்கொண்டனர். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார். இதுதொடர்பாக டிவிட்டும் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் குணமடைய அரசியல் கட்சியினர், ஆளுநர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர் விரைந்து பூரண நலம் பெற வேண்டும் என ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். அவர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து பூரண நலம் பற்ற மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.