சென்னை:
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உளப்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிவடந்து எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இன்றைய விசாரணையின்போது, திமுக தரப்பில் ஆஜனரா வழக்கறிஞர் கபில்சிபல், சபாநாயகர் தனது அரசியல் சாசன கடமையை செய்ய தவறினால், நீதிமன்றம் தன் அரசியல் சாசன கடமையை செய்ய வேண்டும் என வாதாடினார்.
இந்நிலையில், வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வரும் 5-ம் தேதி எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெ மறைவை தொடர்ந்து, அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, எடப்பாடி தலைமையிலான அரசு பதவி ஏற்றதும், அவர் பெரும்பான்மை நிரூபிப்பதற்காக சட்டசபை கூட்டப்பட்டது. அப்போது நடைபெற்ற சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.
இதையடுத்து, ஓ.பிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்ய உத்தர விடக்கோரி, திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து வாதங்கள் முடிவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.