சென்னை:

கர்நாடகாவில் பாஜக வெற்றி குறித்த ஓபிஎஸ் கருத்து தவறானது என்று- தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றி தென்னிந்திய நுழைவுக்கான மணியோசை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது தவறான கருத்து.

சட்டம் ஒழுங்கை பராமரிக்கவே மெரினாவில் போராடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மட்டுமே இடம் உண்டு. விவசாயிகள் உண்ர்ச்சிவசப்படாமல் காவிரிநீர் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும்’’ என்றார்.