டெல்லி: மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்  தோல்லி அடைந்தது.

சபாநாயகர் ஓம் பிர்லா நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின்மீது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற விவாதங்களை அடுத்து (மார்ச் 11)  வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்,  118 எம்.பி.க்கள் ஆதரவுடன் ஓம்.பிர்லா வெற்றி பெற்றார்.

இதனால் அவருக்கு  எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அவையில் பெரும்பான்மையான எம்.பி.க்களை பா.ஜ.க. வைத்துள்ள சூழலில், இந்த தீர்மானம் எளிதில் தோல்வியடைந்து உள்ளது.

முன்னதாக, சபாநாயகர் ஓம் பிர்லா நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என்றும் குற்றம் சாட்டி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதற்கு இந்தியா (I.N.D.I.A) கூட்டணியைச் சேர்ந்த 118 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டிருந்தனர்.

இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி களையும் குறிப்பாக ராகுல் காந்தியையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். சபாநாயகர் என்பவர் அரசாங்கத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானவர். சபாநாயகரின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமே கூட விமர்சிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விவாதத்தின்போது,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சாடிய அமித் ஷா, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் போதெல்லாம் ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிடுகிறார். பிறகு வெளிநாட்டில் இருந்துகொண்டு இங்கே எப்படிப் பேச முடியும்? நாடாளுமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசும் வசதி ஏதும் இல்லை என்று கூறினார். பா.ஜ.க.வை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் இப்போது பாரதத்தையே எதிர்க்கத் தொடங்கிவிட்டனர் என்று அமித் ஷா குற்றம் சாட்டினார்.

[youtube-feed feed=1]