ஈரோடு:
புற்றுநோயை ஏற்படுத்தும் தொலைத்தொடர்பு கோபுரத்தை அப்புறப்படுத்தக்கோரி ஈரோட்டில் இளைஞர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதுகுறித்து, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது டெலிகாம் துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக ரிலையன்ஸ் ஜியோவின் அதிவேக வளர்ச்சி மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை தள்ளாட வைத்துள்ளது.
இந்நிலையில், நிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் ஏராளமான தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைத்து வருகிறது.
இந்நிலையில், புற்று நோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுத்தும் கோபுரங்களை தங்கள் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஈரோடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மனுவை கொடுத்த ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கோவில்பாளையம், புதுக்காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் கூறியதாவது,
எங்கள் கிராம பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் குடியிருப்புகளுக்கு நடுவே, ஜியோ நிறுவனம் 5ஜி, 6ஜி-க்கான டவர்களை அமைத்து வருகிறது. இதன் காரணமாக 2 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்களுக்கு, மக்களுக்கு மூளை பாதிப்பு, வலிப்புநோய், புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே நோய்களை உருவாக்கும் இந்த டவரை எப்படியாவது அங்கிருந்து அகற்றி விடுங்கள். எங்கள் பகுதியில் அமைக்கப்பட் டுள்ள டவரைப் பார்த்து மக்கள் அச்சத்துடனும், பீதியுடனும் இருந்து வருகிறார்கள். எனவே மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டவரை எங்கள் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தக் கோரி மனு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.