டெல்லி

லிம்பிக் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம்  குறித்து பிரதமருக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்  கேள்வி எழுப்பி உள்ளார்,

பாரிசில் நடைபெறும் 33வது ஒலிம்பிக் போட்டியில், நேற்று  நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். வினேஷ் போகத் ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை உள்பட 3 பேரை முறியடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

திடீர்ன 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து இந்த பிரிவில் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் பிரதமர் மோடி அதை எதிர்த்து டிவீட் வெளியிட்டார்   அந்த டிவீட்டில் வினேஷ் போகத்தை வெகுவாக புகழ்ந்திருந்தார்.   ஆனால் அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய போது பிரதமர் அதற்கு வாழ்த்து தெரிவிக்காதது பேச்சு பொருளாகி உள்ளது.

இது குறித்து எதிர்க்க்ட்சிகள் தொடர்ந்து கேள்விக் கனைகளை தொடுத்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மல்யுத்த சம்மேளத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்குக்கு எதிரான போராட்டட்தில் வினேஷ் போகத் தீவிரமாக பங்கு கொண்டதே ஆகும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.  போராட்டாத்தின் போது அவர் காவல்நிலையத்தின் இரவு முழுக்க வைக்கப்பட்டிருந்ததையும் எதிர்க்கட்சியினர் சுட்டிக் காட்டி உள்ளனர்.

இது குறித்து பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பகவந்த் மான்,

“எங்கள் இந்திய வீராங்கனை ஒலிம்பிக் இறுதிச் சுற்றுக்கு சென்ற போது அதை பாராட்டாத  மோடி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் அவருக்கு ஆறுதலாக பதிவு வெளியிட்டுள்ளார்.  வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் அரசியல் தலையீடு உள்ளது.  இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் எந்த ஒரு ஆட்சேபணையும் தெரிவிக்காதது ஏன்?  இறுதிப் போட்டிக்கு முன்பு வினேஷ் போகத்தின் எடையை அவர்கள் ஏன் கண்காணிக்கவில்லை?

எனக் கேட்டுள்ளார்.