லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள கைரனா லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் மே 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் எதிர்கட்சிகள் இணைந்து பாஜக.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன.
காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தல், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து பாஜக.வை எதிர்க்க முடிவு செய்துள்ளது. இதற்கான பொது வேட்பாளரை தேர்வு செய்யும் பணியை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தீவிரமாக மேற்கொண்டுள்ளார்.
மேலும், ‘‘பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்கவும், வேட்பாளர் யார்? என்பது குறித்தும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது’’ என்று ராஷ்ட்ரீய லோக் தள் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
‘‘பாஜக.வை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கோராக்பூர் மற்றும் புல்பூர் தொகுதி இடைத்தேர்தல்கள் மூலம் இதற்கான பாடத்தை அரசியல் கட்சிகள் கற்றுள்ளன’’ என்று சமாஜ்வாடி கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி&ஜெயந்த் சவுத்ரி, ஜெயந்த்&அகிலேஷ், அகிலேஷ்&மாயாவதி, மேலும், ஜெயந்த்&மாயாவதி ஆகியோரும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.