சென்னை: அதிமுகவின் பெரும்பான்மையான எம்எல்ஏக்களை வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு துணை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஒதுக்க கோரி கொடுத்த மனு குறித்து, எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் திமுகவுக்கு 125 இடங்களும்  கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்களும், மற்ற கட்சிகளக்கு 26 இடங்களும் உள்ளன. அதிமுகவுக்கு மட்டுமே 65 இடங்கள் உள்ளன. இதில் எடப்பாடி ஓபிஎஸ் என இரு பிரிவுகளலாக பிரிந்துள்ள நிலையில்,  இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, கட்சியை வழிநடத்தி வருகிறார். தற்போதைய நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு 61 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளன. ஆனால், ஓபிஎஸ்க்கு அவரையும் சேர்த்து 4 பேர் மட்டுமே உள்ளனர்.

இதன் காரணமாக, எதிர்க்கட்சி துணைதலைவராக  இருக்கும் ஓபிஎஸ்.,க்கு பதிலாக  ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவு எடப்பாடி தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சபாநாயகர் இன்றுவரை முடிவு எடுக்கவில்லை. இதனால் எலியும் பூனையுமான எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்-ம் பேரவையில் அருகருகே அமரவேண்டிய சூழல் எழுந்துள்ளது.

இநத் நிலையில்,   சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர. அப்போது எதிர்க்கட்சி துணைதலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி கடிதம் அளித்தாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை இருக்கை விவகாரம் தொடர்பாக பரிசீலனை செய்வதாக, சபாநாயகர் தெரிவித்துள்ளதாக அதிமுக எம்எல்ஏக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.