டெல்லி:
குஜராத்தில் பசுவை கொன்றதாக 4 தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை காரணமாக அமளி ஏற்பட்டு நாடாளுமன்றம் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

குஜராத்தில் இறந்தபோன மாட்டின் தோலை உரித்த 4 பேரை பசு பாதுகாவலர்கள் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அடித்து உதைத்தனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. ஆத்திரம் அடைந்த தலித் மக்கள் அரசு பேருந்துகளை எரித்தனர். இந்த வன்முறை சம்பவங்களில் போலீஸ் ஒருவர் கொல்லப்பட்டார். தலித் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
தலித்கள் தாக்கப் பட்டது பற்றி விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
குஜராத் அரசும், மத்திய அரசும் காட்டுமிராண்டித்ததனமான சங்பரிவார் அமைப்பினரை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்ததின் மத்திய பகுதியில் சென்று முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும், மீண்டும் அமளி ஏற்றபட்டதால் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பதாக சபை தலைவர் அறிவித்தார்.
Patrikai.com official YouTube Channel