டில்லி
12 எதிர்க்கட்சிகள் இணைந்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
பாஜக தாக்கல் செய்த இரு வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாக்களைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி பரிசீலனை செய்ய வேண்டும் என் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆயினும் மாநிலங்களவையை இன்று நடத்திய ஹரிவன்ஸ் அதை ஏற்கவில்லை.
அவர் குரல் வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டு இன்று அந்த மசோதா எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறியது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்தன. இதையொட்டி இந்த எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரி வன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், “இந்த வேளான் மசோதாக்கள் ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே மாநிலங்களவை துணைத் தலைவர் மீது ந்மபிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்ற வரலாற்றில் இன்றைய தினம் ஒரு கருப்பு தினமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.