நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர்.

வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க நிதி, போலி வாக்காளர் அட்டை குறித்து ராஜ்ய சபையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே-வின் கோரிக்கையை ஏற்க துணை சபாநாயகர் மறுத்ததை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.