டெல்லி; குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பிரதமர் மோடி இன்ற நாடாளுமன்ற மேலவை (ராஜ்யசபா)  பதிலுரை  ஆற்றினார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு, அமளியில் ஈடுபட்டதுடன், அவையில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்தத் தேர்தல் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்காக என்றால், அதற்காக தேச மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.. 1977 தேர்தல் அரசியலமைப்பைக் காப்பாற்றியது…” என்று கூறினார்.

“நாட்டின் வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ததன் மூலம் இந்திய பொருளாதாரம் மூன்றவாது இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கம் உள்ளது.

அரசியல் சாசனமே எங்களுக்கு வழிக்காட்டியாக இருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க பாடுபடுவோம்.கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட சவாலாம காலங்களிலும் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரை ஊக்கமளிப்பதாகவும் உண்மையின் பாதியை வழிநடத்துவதாக இருந்தது,” என்று குறிப்பிட்டார்.

அரசியல் சாசனம் எங்களுக்கு வழங்கும் உத்வேகத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

தற்போது பலர் கைகளில் அரசியல் சாசன புத்தகத்தை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.

அரசியல் சாசனத்தின் பெருமைகளை நாடு முழுவதும் பரப்புவது என் கடமை.ஏழ்மைக்கு எதிரான போரில் எனது அரசு தீவிரம் காட்டும்

நாட்டில் 60 வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஒரு அரசு பதவி ஏற்றுள்ளது.

NDA பெற்ற மிகப்பெரிய வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடைபெற்றது.

கடைசியில் எதிர்க்கட்சிகள் தற்போது தான் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளன.

10 வருட கடின உழைப்பிற்கு மக்கள் அளித்துள்ள விருதுதான் தேர்தல் வெற்றி.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் கொடுத்த வெற்றியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை.

எதிர்க்கட்சிகளின் தவறான பரப்புரையை தோற்கடித்து மக்கள் வெற்றியை வழங்கி உள்ளனர்.

இந்தியாவின் அரசியல் சாசனத்தை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான்.

அரசியல் சாசனம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு என்று கூறினார்.

இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியனின் வாழ்வையும் மேம்படுத்துவதே இலக்கு.

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை தேவைகளுடன் வறுமையை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

நாட்டில் அடுத்த 20 வருடங்களுக்கு பாஜக ஆட்சி தான் நடைபெறும்.

காங்கிரசின் செயல்பாடுகள் பாஜகவை அடுத்த 20 வருடங்களுக்கு ஆட்சியில் வைத்திருக்கும்.

இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.

நாட்டில் ஏழ்மைக்கு எதிரான போர் பிரகடனத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம். அடுத்த 5 வருடங்களில் ஏழ்மைக்கு எதிரான போரில் எனது அரசு தீவிரம் காட்டும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியனின் வாழ்வையும் மேம்படுத்துவதே இலக்கு.

ஆட்டோ பைலட் மோடில் நாடு தானாக பொருளாதாரத்தில் வளர்வதாக காங்கிரஸ் நினைக்கிறது.

கடந்த பத்து வருடங்களில் எங்களின் உழைப்பு ஒரு முன்னோட்டம் மட்டுமே.

சிறப்பான ஆட்சி என்பதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் உழைப்பு இருக்கும். வறுமையில் உள்ள மக்களை மீட்க எனது அரசின் வேகம் மேலும் அதிகரிக்கப்படும் .

காங்கிர அரசு விவசாயிகளை தவறாக வழிநடத்தியது அனைவருக்கும் தெரியும் என்று கூறிய மோடி, ஆனால்,  விவசாயிகளுக்கு துணை நிற்கும் வகையில் மத்திய அரசின் கொள்கைகள் இருக்கும் என்றார்.
இதுவரை எந்த அரசுகளும் செய்யாத அளவிற்கு வேளாண் பொருட்களுக்கான MSP உயர்த்தப்பட்டுள்ளது. நிலத்தில் இருந்து சந்தை வரை விவசாயிகளுக்கு எனது அரசு துணை நிற்கும், வழிகாட்டும்.

இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்ஜின்களாக 2, 3ம் கட்ட நகரங்கள் இருக்கும்.

நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிற்கு பொது போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரப்படும். சிறிய நகரங்களை மேம்படுத்தி இந்தியாவின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்.

மாநிலங்களவைக்கு பிரதமர் மோடி தவறான தகவல்களை வழங்குவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுக்கு பேச வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.