அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது.

இதன் ஒருபகுதியாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து லட்சக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவு பாதிக்கக்கூடும் என்ற நிலையில் பலரும் அச்சமடைந்துள்ளதுடன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்ததை அடுத்து இதைக் கட்டுப்படுத்த 2000 தேசிய பாதுகாப்பு படை வீரர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் அனுப்ப டிரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதேவேளையில், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் வரும்வரை அங்கு அமெரிக்க கடற்படை வீரர்கள் 700 பேரை அனுப்பிவைக்க பென்டகன் தயாராகி வருகிறது.

இருந்தபோதும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், இது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார். இது “வேண்டுமென்றே தூண்டும் நடவடிக்கை” என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார். எங்களிடம் பாதுகாப்புப் பணியாளர்களுக்குப் பஞ்சமில்லை. டிரம்ப் விளம்பரம் தேடிக்கொள்ள இவ்வாறு செய்கிறார் என்று கூறியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்க கடற்படை நிலைநிறுத்தம்: லாஸ் ஏஞ்சல்ஸில் எதிர்ப்பு—பென்டகன் 700 கடற்படை துருப்புக்களை நிலைநிறுத்த தயாராகிறது.

போராட்டங்களை அடக்குவதற்கு கூடுதல் தேசிய காவல்படை வீரர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு வரும் வரை அமெரிக்க இராணுவம் 700 கடற்படையினரை அங்கு அனுப்பும் என்று திங்களன்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

குடிவரவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டங்கள் தொடர்கின்றன. போராட்டங்களை அடக்கவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸின் தெருக்களில் சுமார் 300 தேசிய காவல்படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.

தேசிய காவல்படை வீரர்களை நிறுத்தும் டிரம்பின் முடிவை கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் விமர்சித்துள்ளார், இது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார். இது “வேண்டுமென்றே தூண்டும் நடவடிக்கை” என்று அவர் X இல் பதிவிட்டார். எங்களிடம் பாதுகாப்புப் பணியாளர்களுக்குப் பஞ்சமில்லை. டிரம்ப் விளம்பரம் வேண்டும் என்று கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க 2,000 தேசிய காவல்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதன்கிழமைக்குள் கூடுதல் தேசிய காவல்படை வீரர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, கடற்படை ஒத்துழைக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி கூறினார்.

குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸின் பல்வேறு பகுதிகளில் சோதனைகளை நடத்தி, குடியேற்ற மீறல் குற்றச்சாட்டில் 44 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

குடியேறிகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம்.