டெல்லி: பாக் ஆதரவு பயங்கரவாதிகளின் முகாம்கள்மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சிகள் கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி நாளை காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குபதிலடியாக பாகிஸ்தான் உடனான உறவை முறித்த இந்தியா, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், பாக். ஆதரவு பயங்கரவாதிகள் முகாமை இன்று அதிகாலை 1.30 மணி அளவில் இந்திய  ராணுவம் தாக்கி அழைத்தது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்து என பெயரிடப்பட்டுள்ளது.

 சுமார் 25 நிமிடங்கள்  நடைபெற்ற இந்த ஏவுகனை தாக்குதலானது,  பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது,  இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்து  விளக்கம்அளித்தார்.

இந்த  பரபரப்பான சூழ்நிலையில், நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. சிந்தூர் நடவடிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,  அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியா டுடே டிவி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அமைச்சர்கள் இருப்பார்கள், அவர்களில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் அடங்குவர்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நடவடிக்கை குறித்து விளக்குவதும், தேசிய பாதுகாப்பு விஷயங்களில் முன்னேறுவதற்கான வழி குறித்து விவாதிப்பதும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். பஹல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து 2-வது முறையாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.