சாகர்சா நகர், பீகார்
பீகார் மாநில சாகர்சா நகரில் உள்ள சர்தார் மாவட்ட அரசு மருத்துவமனையில் டார்ச் விளக்கு வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதின் வீடியோ வைரலாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ளது சாகர்சா நகர். அங்கு சர்தார் மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது. அறுவை சிகிச்சையின் போது திடீர் என மின்சாரம் தடை பட்டுள்ளது. அந்த அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி இல்லை.
அதனால் மருத்துவ உதவியாளர் ஒருவர் டார்ச் விளைக்கை பிடித்துக் கொண்டார். அந்த ஒளியில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை முடித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை வீடியோவாக எடுக்கப்பட்டு வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அறுவை சிகிச்சையை நோய்ள்ளியின் பெண் உறவினரும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருப்பது வீடியோவில் வெளியாகி உள்ளது.
அரசு மருத்துவமனையில் அவசரத்துக்கு ஒரு ஜெனரேட்டர் இல்லாததும், உறவுக்காரப் பெண்ணை அறுவை சிகிச்சை அறையில் அனுமதித்ததும் மக்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=9UVqhYZ1bik]