டெல்லி: முக்கிய வழக்குகளை விசாரிக்க 2 அரசியல் சாசன அமர்வை அமைத்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், அரசியல் சாசன அமர்வுகள் வாரத்தில் 3 நாட்கள் செயல்படும் என அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தலா 5 நீதிபதிகள் கொண்ட இரண்டு அரசியல் சாசன அமர்வுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அமர்வுகள் இன்று விசாரணைகளை மேற்கண்டு வருகிறது. இந்த அமர்வுகள் முன்பு நிலுவையில் உள்ள நான்கு விஷயங்கள் இரண்டு பெஞ்ச்கள் முன்பும் பட்டியலிடப்பட்டுள்ளன.
முதல் பெஞ்ச்சில் இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் இடம்பெற்றுள்ளார். அவருடன் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ் ரவீந்திர பட், பேலா எம் திரிவேதி, ஜேபி பார்திவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அமர்வானது, அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவுகளின் நோக்கங்களுக்காக ஒரு சமூகமாக முஸ்லிம்கள் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களாக அறிவிக்கப்படலாமா?
சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு (SGPC) நிறுவனங்களில் சீக்கியர்களுக்கான சிறுபான்மை இட ஒதுக்கீடு (SLP (C) எண்.2755/2008)
உச்ச நீதிமன்றத்தை மேல்முறையீட்டு மற்றும் அரசியலமைப்பு பிரிவுகளாகப் பிரிப்பதற்கான நிவாரணங்களைக் கோரும் மனுக்கள், முன்னாள் (W.P.(C)எண்.36/2016)
அரசியலமைப்பின் செல்லுபடியாகும் 103 வது திருத்தம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது (WP(c) No.55/2019).
ஆகியவற்றை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஹேமந்த் குப்தா, சூர்யா காந்த், எம்எம் சுந்திரேஷ் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் உள்ளனர். இந்த அமர்வானது,
“நேர்காணலுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களின் தேவையை அறிமுகப்படுத்துதல், முழு தேர்வு செயல்முறைக்குப் பிறகு (எழுத்துத் தேர்வு மற்றும் அடங்கியது) நேர்காணல்) முடிக்கப்பட்டது,
75 வயதுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க அனுமதிக்கும் ஹரியானா அரசின் கொள்கையின் செல்லுபடியாகுமா? இது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CRL.A.NO.1003/2017) பிரிவு 433A ஐ மீறுகிறது.
ஆளுநர்கள் ஒப்புதலின்றி மாநில அரசுகளே ஆயுள்தண்டனை கைதிகளை விடுவிக்க முடியுமா, பிரிவு 161 குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்ப்பட்டு உள்ளது.
இந்த அமர்வுகள், ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், மற்றும் வியாழன் கிழமைகளில் 2.5 மணிநேரம் வழக்குகளை விசாரிக்கும் என தலைமை நீதிபதி யுயு லலிதா கூறியுள்ளார்.