ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை மத்திய அமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று திறந்துவைத்தார்.
சிட்னி, மெல்போர்ன், பெர்த் ஆகிய இடங்களில் இந்திய தூதரகங்கள் உள்ள நிலையில் நான்காவதாக பிரிஸ்பேன் நகரில் துவக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
தவிர, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான வர்த்தகம் மேம்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.
Patrikai.com official YouTube Channel