ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட அணையை ஆப்கன் அதிபரும், இந்திய பிரதமரும் திறந்து வைத்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹேரத் மாகாணத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட அணையை இன்று ஆப்கன் அதிபரd அஷ்ரப் கனியும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் திறந்து வைத்தனர். இந்த அணை மூலம் 750 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பிற்கு பாசன வசதி கிடைக்கும். மேலும் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் பயன்படும். .
“இந்த அணையை கட்டி முடிக்க பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. இந்த காலகட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதள்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த தடைகளை எல்லாம் எதிர்த்து நின்று அணையை கட்டி முடித்திருக்கிறோம்” என்று ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்தார்.