சென்னை:
சட்டப்பேரவையில் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை திறந்தது குற்றம் என்று சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தெரிவித்துளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது என்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, நிகழ்ச்சியை புறக்கணித்தன.
இந்த நிலையில் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர், சேடப்பட்டி முத்தையா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், “ஊழலுக்கான தண்டனை பெற்று தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா அவபெயர் தேடி தந்தவர். சட்டம் இயற்றுகின்ற சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறந்தது மிகப்பெரிய அகம்பாவம்.. குற்றம்” என்று சேடப்பட்டி முத்தையா தெரிவித்துள்ளார்