சென்னை: ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஷோகோ (Zoho)  நிறுவனர்  ஸ்ரீதர்வேம்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், அமெரிக்காவின் டல்லாஸில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி மாணவர் சித்தார்த் நந்தியாலா, மருத்துவத்துறையில் ஒரு முக்கியமான புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது ‘சர்க்காடியான்’ (Circadian) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) app-ஆல் , வெறும் 7 நொடிகளில் இதய நோய்களை கண்டறிய முடியும் என்பதால், இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பம் மக்களின் வேலைவாய்ப்பு பறித்து விடுமோ என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

AI தொழில்நுட்பத்தின் வருகை, பல software engineerகளின் வேலையை காலி செய்துவிடும் என்று  OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி,  Zoho நிறுவனத் தலைமை அதிகாரி  ஸ்ரீதர் வேம்புவும் தெரிவித்துள்ளார்.  எ அதாவது,  90 சதவீத மென்பொருள் குறியீட்டு முறைகளை இனி AI எழுதும்  என்றும், இதனால் மென்பொருள் குறீட்டு முறைகளை எழுதி வரும் சாப்ப்ட்வேர் பணியாளர்களுக்கு பாதிப்பு  ஏற்பட வாய்ப்பு உள்ளதாக,   ஸ்ரீதர் வேம்புவும் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும்  செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம், மனிதர்களின் வேலையைப் பறித்துக் கொள்ளுமா என்ற அச்சம் பரவலாக உலக மக்களிடையே  எழுந்துள்ளது. ஏனென்றால், அதனால் முடியாதது என்று எதுவும் இல்லை என்ற அளவுக்கு அதன் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் காரணமாக பல்வேறு சிக்கல்களும் எழுந்து வருகின்றன.

சிலர் செயற்கை நுண்ணறிவால், மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், வேறு சிலர் AI, மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துக் கொள்ளும் என்றும் கூறி வருகின்றனர்.

ஏற்கெனவே, AI  தொழில்நுட்பத்தால், software engineer களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறியிருந்தார்.  செயற்கை நுண்ணறிவைச் சரியாகக் கையாளும் போது, இந்த தொழில்நுட்பம் மனிதர்களின் பணியை மேலும் வேகமாகச் செய்துமுடிக்க உதவியாகவே  இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். 

ஆனால், AI தொழில்நுட்பத்தின் வருகை, பல software engineerகளின் வேலையை காலி செய்துவிடும் என்று  OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன்  கூறியிருப்பது உலக முழுவதும் உள்ள சாப்ட்வேர் பொறியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பிரிட்டனில் மூன்று மில்லியன் தனியார் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு துறைகளின் செயல்பாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,  கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் கூட கோடிங் எழுதுவது போன்ற பணிகளுக்கு பெருமளவில் தற்போது ஏஐ கருவிகளை சார்ந்து இருக்கத் தொடங்கி விட்டன.  இது, வரும் காலத்தில் பல லட்சம் மென்பொறியாளர்களின் பணியை பாதிக்கும் என தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் டோனிபிளேர் இன்ஸ்டியூட் சார்பாக நடத்திய ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில்,    அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் 3 மில்லியன் தனியார் வேலை வாய்ப்புகள் பறிபோகும் எனக் கூறியுள்ளது. அதே வேளையில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்  வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில், ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக,   பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 முதல் 2,75,000 வரையிலான வேலை வாய்ப்புகள் பறி போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதர்கள் செய்து வரக்கூடிய இந்த வேலைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்யும் வேலைகளாக மாறிவிடும் என அச்சம் தெரிவித்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் ஏஐ வளர்ச்சியானது,  அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கும் என தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதன் மூலம் முதலில் மேலாண்மை மற்றும் கிளர்க் அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை தொடர்பான பணிகள், பேங்கிங் மற்றும் பைனான்ஸ் தொடர்பான வேலைகள் அதிகளவில் தொழில்நுட்பம் சார்ந்தவையாக மாறும் எனவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட உச்சநிலையை அடைந்த பிறகு இந்த நிலைமை மாறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

அதே வேளையில்,  ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த புதிய வேலைகள் உருவாகும் என்பதால் இளைஞர்கள் அதற்கு ஏற்றார்போல தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிபிபட்டுள்ளது.

மேலும் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாற்றாக சில வேலைகள் உருவாகும் நிலை வாய்ப்பு உள்ளது என்றும்,  ஆனால் சிக்கலான நடைமுறைகளை கொண்ட வேலைகள் தொடர்ந்து மனிதர்களால் தான் சாத்தியப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில்,  Ben Thompson உடனான நேர்காணலில், OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான   sam altman, செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியால், இனி software engineer-களுக்கான தேவை வெகுவாக குறைந்து விடும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், பல IT நிறுவனங்களில் 50 சதவீத மென்பொருள் குறியீட்டை AI தான் எழுதுகிறது என்று உறுதிப்படுத்தி இருந்தார்.

Anthropic நிறுவனத்தின் CEO ((Dario Amodei)) டாரியோ அமோடியும், இன்னும் 12 மாதங்களுக்குள் அனைத்து மென்பொருள் குறியீடுகளையும் AI எழுதும் என்று கணித்திருந்தார். மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க்க்கும்  கடந்த ஜனவரி மாதம் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார்.  கடந்த ஆண்டு, Nvidia CEO ஜென்சன் ஹுவாங், எதிர்காலத்தில், குறியீட்டு முறையைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அந்தப் பணியை AI  செய்யும் என்று தெரிவித் திருந்தார்.

இந்த விவாதத்தில் ,இப்போது ZOHO ஸ்ரீதர் வேம்புவும்,  AI 90 சதவீத  குறியீட்டை எழுதும் என்பதை ஒப்புக்கொள்வதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும், software engineer எழுதும் குறியீட்டில்  90 சதவீதம் (‘boiler plate’) “பாய்லர் பிளேட்” வகையில்  உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருபுரிதலுக்காகச் சொல்லவேண்டும் என்றால், பாய்லர்பிளேட் என்பது அடிப்படை உள்ளடக்கங்கள் மற்றும் அடிப்படை SERVER பக்கத்துக்கு பொருத்த மான  கிக்-ஸ்டார்ட் டெம்ப்ளேட் ஆகும். அதாவது, கட்டுமானத் தொகுதிகள் இல்லாத வீட்டின் வரைபடத்தைப் போன்றதாகும்.

மனிதர்கள் ஏற்கனவே கண்டுபிடித்த வடிவங்களை அங்கீகரித்து செயலாக்குவதில் AI சிறந்து விளங்குகிறது. இருப்பினும், முற்றிலும் புதிய வடிவங்களை உருவாக்கும் திறன் AI க்கு உள்ளதா? என ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

ZOHO ஸ்ரீதர் வேம்புவின் பதிவுக்கு  கலவையான கருத்துக்கள் பதிலாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். பலர் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், சிலர், இதெல்லாம் ஒரு ஜுஜுபி என எப்போதும்போல கலாய்த்து வருகின்றனர்.

இந்த சூழலில், 2025 ஆம் ஆண்டில், மென்பொருள் தீர்வுகளை வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் செயல்படுத்துவதில்  AI  பயன்படுத்தப்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது. மேலும்,  மென்பொருள் பொறியியலில்     AIக்கான சர்வதேச சந்தை இந்த ஆண்டுக்குள்,57.2 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 33.4 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

AI குறியீட்டு உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று 75 சதவீத  டெவலப்பர்கள் நம்புவதாக  GitHub நடத்திய  கருத்துக் கணிப்பு கூறுகிறது. கூடுதலாக, IDC நடத்திய ஒரு ஆய்வில், இந்த ஆண்டில், குறிப்பிடத்தக்க 90 சதவீத  நிறுவனங்கள் AI-மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மேம்பாட்டில் முதலீடு செய்ய விரும்புவதாகக் கணித்துள்ளது. அதே சமயம், 85 சதவீத  வணிகங்கள் AI-சார்ந்த மென்பொருள் மேம்பாட்டை ஏற்றுக்கொள்ளும் என்று IDC அறிக்கை தெரிவிக்கிறது.

ஒட்டு மொத்தத்தில், ஏஐ தொழிட்ப வளர்ச்சியானது, தற்போத உச்சத்தில் உள்ள மென்பொருள் துறையை (ஐடி) பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் அதை நம்பி உள்ள கோடிக்கணக்கான மென்பொருள் வல்லுநர்கள் (Software engineers) வேலைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியானது, பொறியாளர்களின்  வேலை பளுவை குறைக்குமா, அல்லது ஊக்குவிக்குமா என்பது போக போகத்தான் தெரியும் என பல மென்பொருள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.