நீலகிரி

பாதை சீரமைப்பு பணி முடிவடையாததல மேலும் 2 நாட்களுக்கு ஊட்டி மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஊட்டி, குன்னூர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன. ,மேலும் மலைப்பாதை, ராணுவ பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்ததனா.

கல்லாறு – குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டதால் ஊட்டி – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை 5 ஆஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது.

மலை ரெயில் பாதையை சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது