ட்டி

ரும் 31 ஆம் தேதி வரை ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே ஆன மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியிலிருந்து – மேட்டுப்பாளையம் வரை மலைரயில் இயக்கப்படுகிறது. மலை பாதையின் இருபுறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள், வனவிலங்குகளும் தென்படுவதால் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.

மழைகாலங்களில் மலைகளிலுருந்து மண்சரிவது, கனமழையால் மரங்கள் விழுவது என தண்டாவளங்கள் சேதமடைகின்றன. எனவே அவ்வப்போது ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது.

அவ்வ்வகையில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் மண்சரிவு காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கும், உதகையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கும் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.