கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் அவரது சொந்த ஊரான கோட்டயம் அருகே உள்ள புதுப்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய இறுதி ஊர்வலம் 34 மணி நேரம் கடந்து இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தது.

வழியெங்கும் ஏராளமான மக்கள் அவருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக திருவனந்தபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே. ஆண்டனி அவரது உடலைப் பார்த்து கதறி அழுதது அங்கு கூடியிருந்தோரை உணர்ச்சிக்குள்ளாக்கியது.

இன்று பிற்பகல் 3:30 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உம்மன் சாண்டி இறுதி ஊர்வலம் : 15 மணி நேரமாக வழிநெடுகிலும் பால்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி…