அமராவதி: திருப்பதியில் உள்ள 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம் என்று அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தனது பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்​னிட்​டு,  தனது குடும்​பத்​தா​ருடன் ஏழு​மலை​யான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்​தார். மேலும்,, பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்​னிட்​டு, திருப்​பதி தேவஸ்​தானத்​தின் எஸ்​வி. அன்​ன​தான அறக்​கட்​டளைக்கு சந்​திர​பாபு நாயுடு ரூ.44 லட்​சத்​திற்​கான காசோலையை தேவஸ்​தான அறங்​காவலர் பிஆர். நாயுடு​விடம் வழங்​கி​னார்.

பின்னர், அங்குள்ள விருந்​தினர் மாளி​கை​யில்  செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய சந்திரபாபு நாயுடு,   திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் என்​பது பல நூறு ஆண்​டு​களாக இந்து பக்​தர்​களின் உணர்​வு​களோடு பின்னி பிணைந்த ஒரு கோயி​லாகும். என்னை அலிபிரி​யில் நடந்த வெடி குண்டு சம்​பவத்​தி​லும் ஏழு​மலை​யான் தான் காப்​பாற்​றி​னார். திரு​மலை​யில் புனித தன்​மையை சீர்​குலைக்​கும் நிகழ்​வு​கள் நடத்த அனு​ம​திக்க மாட்​டோம்.

அலிபிரி பைபாஸ் சாலை​யில் மும்​தாஜ் ஹோட்​டல் கட்ட வழங்​கப்​பட்ட அனு​மதி ரத்து செய்​யப்​படும். மேலும், இந்​துக்​கள் அல்​லாதவர்​கள் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் பணி​யாற்ற அனு​மதி இல்​லை. இது இந்​துக்​களின் மனநிலையை பாதிக்​கும் செய​லாகும். 7 மலைகளும் ஏழு​மலை​யானின் சொத்​தாகும்.

இவ்​வாறு சந்​திர​பாபு நா​யுடு கூறி​னார்​.

திருப்பதி ஏழுமலையான் குடியிருந்து வரும்  திருமலை ஏழு மலைகளைகொண்டது.  ஏழுமலையான் கோவில் கொண்டுள்ள  இடம் சப்தகிரி எனப்படும். இந்த 7 மலைகளான, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.

1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை: இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை: விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை: ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

7. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

கடந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது, இந்த மலைகளில் கிறிஸ்தவ அமைப்புகள் தேவாலயங்களை நிறுவின. மேலும் பல ஆக்கிரமிப்புகள் நடத்தப்பட்டன. அவை எல்லாம் அகற்றப்படும், 7 மலை பகுதிகளும் ஏழுமலையானனுக்கே உரிமையானது  என முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார்.