ஐதராபாத்:

ண்டர்நெட் மூலம் விளையாடும் சீட்டு விளையாட்டான ரம்மி விளையாட்டுக்கு தெலங்கானா அரசு தடை விதித்துள்ளது. மீறி விளையாடுவது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல இடங்களில் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வளர்ந்து வரும் டெக்னாலஜி மாற்றங்களால் ஆன்லைன் மூலம் பணம் வைத்து விளையாடும் ரம்மி சீட்டாட்ட விளையாட்டு பிரபலமாகி வருகிறது.

இதன் மூலம் ஏராளமானோர் பணம் பறிகொடுத்து வரும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் சீட்டாட்ட விளையாட்டான ரம்மி விளையாட்டுக்கு  தடை விதித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டு உள்ளது.

தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ். பெரும்பாலான இளைஞர்கள், ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதாக, உளவுத் துறை ஆய்வில் தெரிய வந்ததை தொடர்ந்து இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடுவதன் மூலம் இளைஞர்கள் பணத்தை பறிகொடுத்தும், பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாக,  அதன் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில், மாநில அரசு சிறப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.

‘அதன்படி, ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை விளையாடுவோர், அந்த விளையாட்டை தங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் வைத்திருப்போர், அதை பிறருக்கு கற்றுத் தருவோர் ஆகியோரை கைது செய்யும் வகையில் அந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.

எனவே, மாநிலத்தில், இது போன்ற விளையாட்டுகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.