பழநி
பழநி ஆலயத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ்க் கடவுளான முருகனுக்குத் தைப்பூச திருவிழா மிகவும் முக்கியமான விழா ஆகும். இதையொட்டி பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு பக்தர்கள் கால்நடையாகவும் வாகனங்கள் மூலமும் வருவது வழக்கமாகும். இந்த வருட விழாவுக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வோருக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் விவரங்களைக் கோவில் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதில் காணப்படுவதாவது ‘
“பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 2021 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா 22.01.2021 முதல் 31.01.2021 வரை நடைபெறுகிறது. பக்தர்கள் www.tnhrc.gov.in என்ற திருக்கோயில் வளை தளத்தில் முன்பதிவு செய்து தரிசன டிக்கட் பதிவிறக்கம் செய்யலாம்.
ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்காகக் கீழ்க்காணும் இடங்களில் ஆன்லைன் முன்பதிவு மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்கள் முன்பதிவு மையங்களில் கட்டணமில்லா தரிசன டிக்கட் பெற்று சுவாமி தரிசனம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவில், ஒட்டன் சத்திரம், (திண்டுக்கல் – பழநி சாலையில்)
- திருக்கோவில் காலடி மண்டபம்,. தாசநாயக்கன்பட்டி, ()தாராபுரம் – பழநி சாலையில்)
- அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர், (உடுமலை – பழநி சாலையில்)”
என அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]