புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக, நாடெங்கிலும் மொத்தம் 15 இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொண்ட அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள், 4 எச்எஸ்பிசி வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.46.96 கோடியை முடக்கியுள்ளார்கள்.

இதுதவிர, சோதனையின்போது, 17 ஹார்ட்டிஸ்க்குகள், 5 லேப்டாப்புகள், அலைபேசிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.

‍சோதனை நடத்தப்பட்ட நிறுவனங்களின் பதிவுசெய்யப்பட்ட அலுவலகங்கள், அதன் இயக்குநர்கள் மற்றும் அவற்றின் பட்டயக் கணக்காளர்கள் ஆகியோர் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதுதொடர்பாக யான் ஹவோ, திராஜ் சர்கார் மற்றும் அன்கிட் கபூர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும், ஆன்லைன் பெட்டிங் முறைகேட்டிற்காக, ஒரு புதுமையான செயல்வகையை பயன்படுத்தியிருந்தார்கள் என்று கூறப்படுகிறது.

டெல்லி, குருகிராம், மும்பை மற்றும் புனே ஆகிய பகுதிகளின் இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.