புதுடெல்லி: தன்னுடைய நிதித்துறை இலக்கு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அரசால் நடத்தப்படும் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற மோடி அரசின் கொள்கையால், இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை தன்னுடன் இணைத்த நிதியிலிருந்து, தனது கடனை செலுத்தும் நிலை உள்ளதால், ஓஎன்ஜிசி, நிச்சயமற்ற குறைந்த வைப்பு நிதியில் இயங்கி வருகிறது.
2018 செப்டம்பர் காலகட்டத்தின்படி, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிதி மற்றும் வங்கி வைப்புத்தொகை ரூ.167 கோடியாக குறைந்துவிட்டது.
ஆனால், 2018 மார்ச் மாத காலகட்டத்தில், அத்தொகை ரூ.1,013 கோடியாகவும் மற்றும் 2017 மார்ச் மாத காலகட்டத்தில், அத்தொகை ரூ.9,511 கோடி என்பதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.