ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
காஷ்மீரின் குல்காம் நகரில் ஆரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவலை கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
தொடர்ந்து அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
மோதலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். தொடர்ந்து சண்டை நீடிக்கிறது. அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.