அகமதாபாத் : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ரூபானி உள்பட இதுவரை பலியானோர் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. மேலும் விபத்துக்கான விமானத்தில் இருந்து ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு கருப்பு பெட்டியை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் பயணம் செய்த ஒருவர் தவிர 241 பேரும் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து காரணமாக மருத்துவ மாணவர்கள் உள்பட மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் இருக்கும் இரண்டு முக்கியமான கருப்பு பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விமான விபத்து காரணமாக, அதில் விமானம் செய்த பயணிகள் 241 பேர் பலியான நிலையில், விமானம் கட்டிடங்கள் மீJ விழுந்ததால் ஏற்பட்ட விபத்திலும் பலர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த விபத்து காரணமாக பலியானோர் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், விமானம் விழுந்த மருத்துவ கல்லுரி கட்டிடத்தில் பணியாற்றி வந்த பல மருத்துவர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன. பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள கட்டிடங்களில் விமானம் மோதியதில் தரையில் இருந்த பலர் கொல்லப்பட்டனர். பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகின. இதன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 265ஐ தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக விமான விபத்துகளின் போது, அதற்கான காரணத்தை அறிவதில் கருப்புப் பெட்டியின் பங்கு மிக முக்கியமானது. 1950களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டேவின் வாரன் என்பவர் கண்டுபிடித்த இந்த கருப்புப் பெட்டி, விமானத்தின் வாள் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும். அதில் விமானிகள் மற்றும் ஊழியர்களின் உரையாடல்கள், விமானத்தின் வேகம், பறந்த உயரம், அப்போதைய காலநிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவாகிவிடும்.
அதை வைத்தே பெரும்பாலான விமான விபத்துகள் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரியவரும். தீப்பற்றினாலும் பாதிக்காத வகையில் டைட்டானியம் மற்றும் உலோகங்களால் கருப்புப் பெட்டி வடிவமைக்கப்படும். கடுமையான அழுத்தம் மற்றும் மோதலை தாங்கக்கூடியவை.
இந்த நிலையில் அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து மீட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் பதிவான தகவல்களை ஆய்வு செய்ய 10 -15 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே அகமதாபாத் விமான விபத்திற்கான சரியான காரணம் தெரியவரும்.