பிரிஸ்பேன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி, பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது கடந்த 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை காபா மைனதானத்தில் எந்தவொரு அணியும் வீழ்த்தாத நிலையில், அந்த வரலாற்றை மாற்றி இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்று, வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்தி அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், கூகுள் வலைதள நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில், இந்திய அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு, பிசிசிஐ, ரூ.5 கோடி போனஸ் அறிவித்துள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதிவிட்ட டிவிட்டில், “மறக்க முடியாத வெற்றி என்றும் இந்தத் தொகையைவிட வெற்றியின் மதிப்பு உயர்ந்தது” எனத் தெரிவித்தார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிவிட்ட டிவிட்டில், இது மறக்கமுடியாத தருணங்கள். இந்திய வீரர்கள் தங்கள் திறமையையும், குணத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி விட்டார்கள். போராட்டம், மன உறுதி ஆகியவற்றை இந்தத் தொடரில் இந்திய அணி வெளிப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தேசத்தையும் இந்திய அணி ஈர்த்துவிட்டது. ரஹானே, ரவிசாஸ்திரி குழுவினருக்கு வாழ்த்துகள். குறிப்பாக சிராஜ், ரிஷப் பந்த், ஷுப்மான் கில் ஆகியோருக்குப் பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்திய அணியின் வெற்றி குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், மிகப் பெரிய டெஸ்ட் போட்டி தொடர்களில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. என்ன ஒரு தொடர், வாழ்த்துக்கள் இந்தியா, ஆஸ்திரேலிய அணியினரும் நன்றாக விளையாடினர் என , கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.