சென்னை: நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை தொடர்பான கருத்துக்கள் பரவி வரும் நிலையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்ந்து, வரும் 18-ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு  நடைபெற உள்ளது. இதில், கேள்வி நேரம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த 5 நாட்களும் அரசின் பணிகளுக்கு ஒதுக்கப்படும் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.

இந்த கூட்டத்தொடரில் ஒரேநாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம்,  இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது தொடர்பான சட்ட மசோத்தாக்கள் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில்,  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு நடத்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் போபாலில்  செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், நாடு முழுவதும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கருத்துக்கு மத்தியில், சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த ஆணையம் தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

“சட்ட நடைமுறைகள், அரசியலமைப்பு மற்றும் ஆர்பி சட்டத்தின்படி, தேர்தலை நடத்துவதற்கான ஆணை எங்களிடம் உள்ளது, நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றவர்,  “அரசியலமைப்பு விதிகள் மற்றும் RP சட்டத்தின்படி தேர்தலை நேரத்திற்கு முன்னதாக வழங்குவதே எங்கள் கடமையாகும். 83 (2) வது பிரிவு 5 ஆண்டுகள் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் என்று கூறுகிறது மற்றும் RP சட்டத்தின் 14 வது பிரிவு 6 மாதங்களுக்கு முன்பு என்று கூறுகிறது. சட்ட விதிகளின்படி, தேர்தலை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம், என்றார்.

அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு குறித்த காலத்துக்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் கடமை. சட்ட விதிகளின்படி, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நடைபெறும் நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த நேரம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலை அறிவிக்கலாம். சட்டசபை தேர்தலிலும் இதே விதிமுறைகள் உள்ளன.

சட்டவிதிகளின் படி எந்த நேரத்திலும் நடத்த தயாராக  இருப்பதாக கூறியவர், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தவும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், எம்பி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர்  ஆம் தேதி வெளியிடப்படும் என்றவர்,  புதிய தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் தரவுகளில் ஏதேனும் முரண்பாடுகளைக் கண்டறிந்தால், திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்றார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூறியவர், சிறையில் உள்ள கைதிகளுக்கு சட்டப்படி வாக்களிக்க அனுமதி இல்லை என்றும்  தெரிவித்துள்ளார்.