டெல்லி
ஜனவரி 8 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய பாஜக அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதும், அதற்குப் பெரியளவில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும், எதிராக 196 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
,நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேவும் அதற்கு எதிரான குரல்களும், போராட்டங்களும் வெடித்தன. எனவே, இந்த திட்டம் குறித்து முடிவெடுக்க கூட்டு நாடாளுமன்றக் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது.
அக்குழுவில் 27 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 39 பேர் இடம்பெற உள்ளனர். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜன.8-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.