ர்னூல்

ந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளிக்கு ஒரு குரங்கு தினமும் வந்து வகுப்பறையில் கலந்துக் கொள்கிறது.

வெகுநாட்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி நடித்த லட்சுமி என்னும் ஒரு தமிழ்த் திரைப்படம் வந்தது. அதில் ஒரு குரங்கு பலவிதமான பணிகளையும் கதாநாயகி ஸ்ரீதேவிக்குச் செய்து தரும். அந்த குரங்கு பல சாதனைகளை நிகழ்த்தும். எழுத்தாளர் சுஜாதா தனது கதை ஒன்றில் இந்த குரங்கு பற்றிக் குறிப்பிட்டிருப்பார். தற்போது அதே பாணியில் ஆந்திராவில் லட்சுமி என அழைக்கப்படும் ஒரு குரங்கு கல்வி கற்கும் பணியைச் செய்து வருகிறது.

கர்நூல் மாவட்டத்தில் பிப்புள்ளி மண்டலத்தில் அமைந்துள்ள வெங்கலம்பள்ளி என்னும் சிற்றூரில் சுமார் 2 வயதாகும் ஒரு குரங்கு அலைந்து வந்தது. கடந்த 3 வாரங்களாக இந்த பெண் குரங்கு இந்த ஊர் அரசுப் பள்ளியில் தினமும் வகுப்புக்களுக்கு வந்து செல்கிறது. மற்ற வேளைகளில் சேட்டை செய்யும் இந்த குரங்கு வகுப்பறையில்  பாடங்களை அமைதியாக கவனித்து வருகிறது. இது அந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறது .

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல் லத்தீப், “எங்கள் பள்ளியில் தற்போது சேர்ந்துள்ள புது மாணவி லட்சுமி வகுப்புக்களுக்குத் தவறாமல் வருகிறாள். இக்குரங்கு யாருக்கும் எவ்வித தீமையும்  செய்யாமல் விருப்பப்பட்ட வகுப்பறைக்குச் சென்று மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தைக் கவனிப்பதால் நாங்கள் இதை விரட்டவில்லை. அடு மட்டுமன்றி இந்த குரங்கு குழந்தைகளுக்குச் சரியாக விளையாடி வருவதால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு தவறாமல் வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.